வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகிற நவம்பர் 9 ம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் ஆழ்கடலில் (வங்க கடல்) உள்ள மீனவர்கள் 9 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அரபிக்கடல் பகுதிகளில் 07.11.2021, 08.11.2021: மத்தியகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும்  இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும்  வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.




வங்க கடல் பகுதிகள்..


07.11.2021, 08.11.2021: தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள், வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும்  இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும்  வீசக்கூடும். 


09.11.2021: தெற்கு வங்க கடல் மற்றும் மத்திய வங்க கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


10.11.2021, 11.11.2021: தமிழ்நாடு கடலோர பகுதிகள், குமரி கடல், மன்னார் வளைகுடா, ஆந்திர கடலோர பகுதிகள், தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும்  இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும்  வீசக்கூடும்.


மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். மேலும் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 9 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 




இந்நிலையில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு சூறாவளி சுழற்சி மற்றும் 09 நவம்பர் 2021 இல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும், தெற்கு ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் நிலவும். கடற்கரை. கடலில் மீன்பிடிக்கச் செல்லும் அனைத்து மீனவர்களும்  அருகில் உள்ள துறைமுகத்திற்குத் திரும்பவும், மீன்பிடிப் படகுகள் கடலுக்குள் செல்லாமல் இருக்கவும் கடலோரக் காவல்படை வழக்கமான வானிலை எச்சரிக்கையை விடுத்து வருகிறது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதால் மீனவர்கள் துறைமுகம் திரும்பவும், மீன்பிடி படகுகள் கடலுக்குள் செல்லாமல் இருக்கவும் வானிலை எச்சரிக்கையை ஒளிபரப்பி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் மீனவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து வருகின்றனர்.