தமிழ்நாட்டில்  9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் திமுக அமோக வெற்றிபெற்ற நிலையில், இந்தத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்டவர்களும் வெற்றி பெற்றிருந்தனர். ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் பல்வேறு இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 இடங்களில் வெற்றி பெற்றனர்.


நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 164 இடங்களில் போட்டியிட்டு 129 இடங்களில் வெற்றி பெற்றனர். இதில் இரண்டு தலைவர்கள், 12 துணை தலைவர்கள், 115 வார்டு உறுப்பினர்கள் மக்கள் இயக்கம் உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நடிகர் விஜய்யை சந்திப்பதற்காக பனையூரில் உள்ள விஜய் இல்லத்திற்கு திங்கட்கிழமையன்று வருகை தந்தனர். அவர்கள் அனைவரையும் சந்தித்த விஜய், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.




 


கரூரில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடந்த முடிந்த 9 மாவட்ட ஊராட்சி உள்ளாட்சி தேர்தலில் 164 இடங்களில் போட்டியிட்டு 120 இடங்களில் வெற்றி பெற்று இரண்டு தலைவர்கள் 12 துணை தலைவர்கள் 115 உறுப்பினர்களை மக்கள் இயக்க உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கிய விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். எதிர் வரும் நகராட்சி தேர்தலில் வாக்காளர் பட்டியல் புதிய பெயர் சேர்ப்பு , நீக்கம் மற்றும் திருத்தம் முகம் 13.11.2021 -14.11.2021 -17.11.2021 -28.11.2021 ஆகிய தேதிகளில் நடைபெறும் என கரூர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போஸ்டர் அடித்து நகர பகுதிகளில் ஒட்டி இருந்தனர்.




 


தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் அவரது ரசிகர்களுக்கு பச்சைக்கொடி காட்டி இருப்பதன் மூலம் வரவிருக்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றிட தற்போது இருந்து தொடங்கிவிட்டனர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X




அதிலும், குறிப்பாக கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் முகாமிலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தங்கள் பணியை ஆற்றிட மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி பல்வேறு முக்கிய கட்சியான திமுக, அதிமுக, தேமுதிக, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சியினருக்கு போட்டியாக தங்களது தேர்தல் பணிகளை தற்போதே தொடங்கியிருப்பதால் வருகின்ற மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் அதிக இடங்களில் போட்டியிட்ட வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது.




ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அதே பார்முலாவில் தேர்தல் பரப்புரையில் சென்று பொதுமக்களை வீடு தேடி தாங்கள் செய்யவிருக்கும் பணிகள் குறித்து தேர்தல் வாக்குறுதி குறித்து பரப்புரையை மேற்கொண்டு வெற்றி வாகை சூட இருப்பதாக கரூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். எப்படி இருந்தாலும் வரும் நகராட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் களம் காண்பது தற்போது உறுதியாகிவிட்டது.