தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)


அவலாஞ்சி (நீலகிரி) 17, மேல் பவானி (நீலகிரி) 10, நடுவட்டம் (நீலகிரி) 9,  சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 7, ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி), பந்தலூர் தாலூகா அலுவலகம் (நீலகிரி) தலா 6, வால்பாறை PTO (கோயம்புத்தார்), சோலையார் (கோயம்புத்தூர்), கூடலூர் பஜார் (நீலகிரி), தேவாலா (நீலகிரி) தலா 5, எமரால்டு (நீலகிரி), க்ளென்மார்கன் (நீலகிரி) தலா 4, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), மேல் கூடலூர் (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 3, குந்தா பாலம் (நீலகிரி), தேக்கடி (தேனீ), பாபநாசம் (திருநெல்வேலி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 2.


 






 


16.07.2022 - தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர். (மலைப்பகுதிகள்), தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


17.07.2022 - 18.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நிலகிரி, கோயம்புத்தூர் (மலைப்பகுதிகள்) தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


19.07.2022 - 20.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


 






 


மீனவர்களுக்கான எச்சரிக்கை :  


16.07.2022: மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


17.07.2022: மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


இதனால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட  நாளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.