கடலூரில் அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்சி.சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் தெரிவிக்கையில்,
கடலூர் புதிய பேருந்து நிலையத்தை எம்.புதூர் பகுதிக்கு கொண்டு செல்வதாக மாநகராட்சி அறிவிப்பு விடுக்கும் நிலையில் மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டத்தில் அதிமுக ஈடுபடும். கடந்த 10 ஆண்டுகளில் குப்பைகள் அகற்றப்படவில்லை என திமுக அமைச்சர் கூறும் நிலையில், அதிமுக ஆட்சியில் எந்த இடத்தில் குப்பை மேடுகள் இருந்தது என்பதை திமுக அமைச்சர் காண்பிக்க முடியுமா? என்றும் மாநகராட்சி மேயர் வந்த பிறகு குப்பையில் கவனம் இல்லை.வேறு அனைத்திலும் கவனம் உள்ளது என்றார்.
மேயர் எது சொன்னாலும் ஓகே சொல்லும் அமைச்சராக மாவட்ட அமைச்சர் உள்ளார். மாநகராட்சியில் உள்ள பிரச்சனைகள் குறித்து அமைச்சர் கேட்பதில்லை. புதிய பேருந்து நிலையம் இடமாற்றம் மாவட்ட மக்களை புறக்கணிக்கும் செயல் எனவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய பேருந்து நிலையம் அமைக்க அதிமுக வலியுறுத்தும் எனவும் தெரிவித்தார்.
மாநகராட்சி சார்பில் அதிமுக பேனர்கள் மட்டும் அகற்றப்படுவதாக என்று அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அனைத்து பேனர்களையும் எடுத்தால் எவ்வித பிரச்சினை இல்லை எனவும் எங்கள் பேனர்களை எடுத்தால் அவர்கள் பேனர்கள் எங்களால் எடுக்கப்படும் எனவும் திமுக ஆட்சி வந்தாலே அடாவடி எனவும் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்