தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளர் சுதீஷின் மனைவி பூர்ணா ஜோதியிடம் வீடு கட்டி தருவதாக கூறி 43 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.


லோகோ பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி  வருக்கிறார் சந்தோஷ் சர்மா. அவர் மாதவரத்தில் 250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 78  வீடுகளை மறைந்த விஜயகாந்தின் மச்சான் சுதிஷின் மனைவி பூர்ணா வாங்க பல கோடி கொடுத்துள்ளார். இதற்கான ஒப்பந்தத்தையும் சந்தோஷ் சர்மாவிடம் போட்டுள்ளார்.


 இந்த ஒப்பந்தத்தின் படி வீடுகளை ஒதுக்காமல், பில்டர் சந்தோஷ் சர்மா, 48 வீடுகளை லாவகமாக வேறு நபருக்கு விற்றுள்ளார். இதனால் பூர்ண ஜோதி கொடுத்த தொகையில் 43 கோடி அபேஸ் செய்துள்ளார். இந்த விஷயம் பூர்ண ஜோதிக்குவுக்கு தெரிய வந்தவுடன் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.


 அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பில்டர் சந்தோஷ் சர்மா மற்றும் உதவியாளர் சாகர் ஆகிய இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.