சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று வலிமை என்ற புதிய வணிகப்பெயர் கொண்ட சிமெண்டை வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்த டான்செம் உத்தேசித்துள்ளது என்றும், பயனற்ற பழைய சுரங்கம் மற்றும் குவாரிகளை மக்களுக்கு பயனுள்ள அமைப்புகளாக மாற்றித்தரப்படும் என்றும் எம் – சாண்ட் தயாரிப்பு தொழிலை முறைப்படுத்த ஒரு புதிய கொள்கை உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நீண்ட் நாட்களாக வலிமை படம் உருவாகி வருகிறது. அந்த படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் வலிமை அப்டேட் என்பதை அடிக்கடி ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். அந்த படத்தின் இசையமைப்பாளரான யுவன்சங்கர் ராஜாவின் பிறந்தநாளான இன்று, இந்த வலிமை சிமெண்ட் அப்டேட் ரசிகர்களுக்கு நிச்சயம் வித்தியாசமானதாக அமைந்துள்ளது.