தஞ்சையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழ்நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கியது. மாணவியின் மரணம் தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து, வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


இந்த நிலையில், இந்த வழக்கில் விசாரணையைத் தொடங்கியுள்ள சி.பி.ஐ. மாணவியின் மரணம் தொடர்பாக எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. சி.பி.ஐ.யின் விசாரணையில் மாணவியின் மரணம் இயற்கைக்கு மாறானது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயத்தில் மாணவியின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகள் யார்? யார்? என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.



 


முன்னதாக, தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்துகொண்டார். மேலும், மாணவியை மதம்மாற்றச் சொல்லி வற்புறுத்தியதாலே தற்கொலை செய்துகொண்டதாக மாணவி பேசுவது போல வீடியோ ரிலீசானது. இதையடுத்து, பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் மாணவியை மதம்மாற்றச் செய்ய வற்புறுத்தியதாலே தற்கொலை செய்துகொணடதாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த சூழலில்,மாணவியின் பெற்றோர்களான தந்தை முருகானந்தம் – சித்தி சரண்யா தொடுத்த வழக்கின் அடிப்படையில் மதுரை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில் காவல்துறையினர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் மாணவியை மதம்மாற்றம் செய்ய சொல்லி யாரும் வற்புறுத்தவில்லை என்று தெரியவந்ததாக காவல்துறையினரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷூம் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது. 




இந்த வழக்கின் முக்கிய ஆதாரமான வீடியோவை எடுத்த செல்போனை வல்லம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் அந்த வீடியோவை எடுத்தவர் சமர்ப்பித்தார். மேலும், அந்த வீடியோ சென்னையில் உள்ள தடயவியல் அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் வீடியோ முழுவதும் வெளியிடப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மாணவியின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதி வார்டன் சகாயமேரி இன்று சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அவரை தி.மு.க. எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் சால்வை போர்த்தி வரவேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க: IPL Auction 2022: தொடக்கத்திலேயே தட்டித்தூக்கணும்.. ஆனா வீரர்கள் எப்படி? குஜராத், லக்னோ அணிகளின் ஸ்குவாட் விவரம்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண