நீர்வரத்து அதிகரிப்பு:




காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரலாறு காணாத அளவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று மேலும் நீர்வரத்து அதிகரித்து, காவிரி ஆற்றில் தமிழக பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 7,000 கன அடியிலிருந்து,  வினாடிக்கு 16,000 கன அடியாக உயர்ந்துள்ளது.


ரம்மியமாக காட்சியளிக்கும் ஒகேனக்கல்:


தொடர் மழையால் மேலும் நீர்வரத்தானது, காவிரி ஆற்றில் தமிழக பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 7,000 கன அடியிலிருந்து,  வினாடிக்கு 16,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் மெயினருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளித்து வருகிறது.


குளிக்க தடை:




காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அருவி மற்றும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ,  ஆற்றை கடக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தடை விதித்துள்ளார். மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்து செல்ல கூடாது என தெரிவித்துள்ளார்.


ஏமாற்றத்தில் சுற்றுலாப் பயணிகள்:


கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருந்தது. தற்போது நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருப்பது, சுற்றுலாப் பயணிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் அதிகரிக்கும்:




காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மேலும் மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கும் என்று மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.தொடர்ந்து காவிரி ஆற்றங்கரையோரம் ஆலம்பாடி, ஊட்டமலை, ஒகேனக்கல் பகுதிகளில் காவல், தீயணைப்பு, வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண