TN Corona Update : தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்வு...! ஒரே நாளில் 54 பேருக்கு பாதிப்பு..!

தமிழ்நாட்டில் நேற்று 90 நபர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு  கடந்த சில தினங்களாக அதிகரிக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், இன்று தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் அதிகரித்துள்ளது.

Continues below advertisement

 தமிழ்நாட்டில் நேற்று 90 நபர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 144 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 54 நபர்களுக்கு கொரோனா பாதிப்ப அதிகரித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு 34 லட்சத்து 56 ஆயிரத்து 317 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டர்களில் 79 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் கொரோனா பரிசோதனை 10 ஆயிரத்து 769 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த ஓரிரு தினங்களாக கொரோனா பரிசோதனை எண்ணிக்கை முதல்நாளை காட்டிலும் அடுத்த நாள் ஆயிரம் அளவில் குறைவாகவே செய்யப்படுகிறது. கடந்த மாதம் 25-ந் தேதி தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 56 ஆக பதிவாகியிருந்த நிலையில் கடந்த 2-ந் தேதி 145 ஆக உயர்ந்திருந்தது. தற்போது 144 ஆக பதிவாகியுள்ளது.

 

இந்த மாதம் 1-ந் தேதி முதல் 6-ந் தேதி தவிர மற்ற நாட்கள் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 34 லட்சத்து 17 ஆயிரத்து 365 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24-ந் தேதி முதல் தமிழ்நாட்டில் கொரோனாவால் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement