ஆடியோ விவகாரம் தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துரை மாற்றப்பட்டுள்ளதாக கரூரில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டியளித்துள்ளார்.
தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கீழ்பவானி பாசன கால்வாய் திட்டத்தில் கான்கிரீட் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும். 8 டிஎம்சி அளவு தண்ணீர் மட்டுமே வெளியேற்ற வேண்டும் என்ற நிலையை மீறி, 20 முதல் 30 டிஎம்சி தண்ணீர் வீணாக வெளியேற்றப்பட்டு வருவதை நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் அனைத்து பழங்களிலும் இரசாயனம் போட்டு பழுக்க வைக்கும் செயலை தடுக்க வேண்டும்.” என்று கூறினார்.
மேலும், ஆற்று மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும். இயற்கை விரோத மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக அமைச்சரவை மாற்றத்தில் டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மதுபான தொழிலில் ஈடுபட்டுள்ள அவரை அமைச்சராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திருக்குறளை மேற்கோள் காட்டினார்.
மேலும், ஆடியோ விவகாரம் காரணமாகவே பழனிவேல் தியாகராஜன் துரை மாற்றப்பட்டதாகவும் விமர்சனம் செய்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்