காவிரியில் தண்ணீர் திறக்காத கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக காங்கிரஸ் எம்பி, ஜோதிமணி கூறியுள்ளார்.


 


 




இதுதொடர்பாக எம்பி ஜோதிமணி செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “காவிரியில் தண்ணீர் திறக்காத கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு கண்டனம். காவிரி பிரச்சனையில் கர்நாடக அரசு தமிழக மக்களுக்கு அநீதி  இழைத்துள்ளது. மத்திய அரசு, கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு சாதகமாக இருக்கக் கூடாது. மனிதாபிமானம்படி தண்ணீரை திறக்க வேண்டும். நடுநிலையாக மத்திய அரசு செயல்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் பாஜக அரசு தான் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது” என்றார்.




 


தொடர்ந்து பேசிய அவர், “100 நாள் வேலை திட்டத்தில் நிதி வழங்காத மத்திய அரசுக்கு கண்டனம். கடந்த ஒன்பது வாரங்களாக 100 நாள் திட்டத்தில் வேலை செய்த பணியாளர்களுக்கு கூலி வழங்கவில்லை. ஏழை மக்கள் தான் 100 நாள் திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர் அவர்களுக்கு ஊதிய வழங்கவில்லை என்றால் அவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். எனவே 100 நாள் திட்டத்தில் வேலை செய்த நபர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும். டெல்லியில் தனியார் செய்தி நிறுவனத்தில் சென்று அவர்கள் பயன்படுத்திய மடிக்கணினி உள்ளிட்ட செல்போன்களை எடுத்துக்கொண்ட சம்பவம் கண்டனத்துக்குரியது” என தெரிவித்தார்