காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே சரக்கு வாகன ரயில் பின்னோக்கி வருகையில் விபத்தில் சிக்கியது.

 

 காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம்

 

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அமைந்துள்ளது. தொழிற்சாலை நிறைந்த மாவட்டம் என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழிற்சாலைக்கு தேவையான,  மூலப்பொருட்களை பல்வேறு சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு வருவது வழக்கம். அவ்வாறு கொண்டு வரும் பொருட்கள் காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையத்தில், இறக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும்.



 

சரக்கு ரயில் வாகனம்

 

அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியில் இருந்து, இரும்பு மூலப் பொருட்கள், இரும்பு கம்பிகள் மற்றும் இரும்பு உருளைகள் ஏற்றிக்கொண்டு 59 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் வாகனம் காஞ்சிபுரம்  பழைய ரயில்வே நிலையத்திற்கு வந்துள்ளது. 59 பெட்டிகளை கொண்ட சரக்கு வாகனம் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் நீளம் கொண்டது. காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையத்தில் உள்ள, சரக்கு ரயில்களை நிறுத்துவதற்கான இருக்கும் பிரத்தேக நடமேடையில் சரக்கு நிறுத்தப்பட்டிருந்தது .




 

இந்தநிலையில் இன்று 5:50 மணியளவில் வாகனத்தை நிலை நிறுத்த பின்னோக்கி செங்கல்பட்டு பாதையில் செயல்பட்ட போது திடீர் விபத்து ஏற்பட்டு அருகில் இருந்த மரம் மற்றும் தடம் மாறி சென்றதால் தண்டவாளங்கள் பெயர் விபத்து ஏற்பட்டது. விபத்தில் நல்வாய்ப்பாக  உயிர் சேதங்கள் ஏதுமில்லை. ஒரு இரு சக்கர வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தது. ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 60 டன் எடை கொண்ட இரும்பு கம்பிகள் உள்ளது என தெரிய வருகிறது.



 

 தொலைத் தொடர்பில்  பிரச்சனையா ?

 

இந்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த, காஞ்சிபுரம் ரயில்வே இருப்புப்பாதை போலீசார் இது குறித்து, விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், ரயில் பின்னோக்கி செல்லும்பொழுது,  சரக்கு ரயில் மேலே ரயில் வழிகாட்டி ( guard ) வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் ரயில் காட் சரக்கு ரயில் மீது நின்று கொண்டு வாக்கி டாக்கி மூலம் எவ்வளவு தூரம் பின்னோக்கி வர வேண்டும் என ரயில் ஓட்டுநரிடம் தகவல் தெரிவித்து வந்துள்ளார். இந்தநிலையில் திடீரென அதில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது.

 

" டேஞ்சர், டேஞ்சர் "

 

அப்பொழுது ரயில் காட் பின் இருந்து " டேஞ்சர், டேஞ்சர் " எனக்கு கூச்சலைத்துள்ள ஆனாலும் சரியாக சிக்னல் கிடைக்காததால், சரக்கு ரயில் வேகமாக தடுப்புக்கல்லில் மோதி அங்கிருந்து சாலைக்கு வந்தது. வையாவூர் சாலையில் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கோனேரி குப்பம் பகுதியை சேர்ந்த முரளி என்ற இளைஞரின் இரு சக்கர வாகனம் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக சாலையில் சென்ற யாருக்கும் எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை.. இதனை அடுத்து வையாவூர் சாலை தற்காலிகமாக மூடப்பட்டு மீட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. க்ரைம் உள்ளிட்ட கனரக வாகனத்தின் உதவியுடன் காவல்துறை மற்றும் ரயில்வே போலீசார் பாதுகாப்புடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 



இதுகுறித்து தென்னக ரயில்வே சென்னை கோட்டம், காஞ்சிபுரம் நிரந்தர வழி தட பொறியாளர் சஞ்சீவி தெரிவிக்கையில் , இரும்பு உருளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்திலிருந்த  கார்ட் மற்றும் ஓட்டுநர் இடையே தகவல் தொடர்பு பரிமாற்றம் துண்டிப்பு காரணமாகவே இந்த விபத்து  நடைபெற்றதாக, ரயில் ஓட்டுநர்  மற்றும் அங்கிருந்தவர்கள்   தெரிவித்திருக்கிறார்கள் அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.