மக்கள் நீதிமய்ய கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடந்த 2017ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்றபோது, மகாபாரதம் மற்றும் ராமாயணம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, மகாபாரதம் மற்றும் ராமாயணத்தை கமல்ஹாசன் இழிவுபடுத்தியதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெல்லை மாவட்டம் பழவூரைச் சேர்ந்த ஆதிராம சுந்தரம் என்பவர் வள்ளியூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  




இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் தரப்பு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். கடந்த மூன்று வருடங்களாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கமல்ஹாசன் தரப்பு வழக்கறிஞர் ராமாயணம் மற்றும் மகாபாரதம் குறித்து பல ஆண்டுகளாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. பட்டிமன்றங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது என்று வாதிட்டனர்.  இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர்.