போக்குவரத்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றுவருகின்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இன்று காலை முதல் 14 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது 94% பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. 15 ஆயிரத்து 138 பேருந்துகளில் 14 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு முழுவதும் இயங்கும் பேருந்துகளின் விபரம் 



  • தலைநகர் சென்னையில் 97 சதவீதம் பேருந்துகள் இயங்குவதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது மொத்தம் இயக்கப்படவேண்டிய மூன்று ஆயிரத்து  233 பேருந்துகளில், மூன்று ஆயிரத்து 129 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • விழுப்புரம் மண்டலத்தில் மொத்தம் 84 சதவீத பேருந்துகள் இயங்குவதாக போக்குவரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 8 மணி நிலவரப்படி கால அட்டவணைப்படி இயக்கப்படவேண்டிய மொத்தம் இரண்டு ஆயிரத்து 52 பேருந்துகளில் ஆயிரத்து 724 பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • சேலம் மண்டலத்தைப் பொறுத்தவரையில் பெரும்பான்மையான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதாவது மொத்தம் இயக்கப்படவேண்டிய ஆயிரத்து 101 பேருந்துகளில் ஆயிரத்து 79 பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். 


தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 14 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், ஆனால் மொத்தம் இயக்கப்படவேண்டிய பேருந்துகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 138 பேருந்துகள் எனவும், மொத்தம் 94 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 



  • கோவை மண்டலத்தைப் பொறுத்தவரையில் ஐந்து சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படவில்லை. அதாவது 95 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் இயக்கப்படவேண்டிய இரண்டாயிரத்து 51 பேருந்துகளில் ஆயிரத்து 952 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 

  • கும்பகோணம் மண்டலத்தில் 91 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றது என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது  இயல்பாக இரண்டு ஆயிரத்து 918 பேருந்துகள் இயக்கப்படவேண்டும் ஆனால் இரண்டாயிரத்து 715 பேருந்துகள்தான் இயக்கப்படுகின்றது. 

  • மதுரை மண்டலத்தில் 98 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளனர். அதாவது, மொத்தம் இயக்கப்படவேண்டிய இரண்டாயிரத்து 69 பேருந்துகளில் 39 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படவில்லை என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. 

  • நெல்லை மண்டலத்தில் 99 சதவீத பேருந்துகள் வழக்கமான அட்டவணையில் இயக்கப்படுகின்றது. மொத்தம் இயக்கவேண்டிய ஆயிரத்து 617 பேருந்துகளில் 20 பேருந்துகள் மட்டும் இயக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், ‘தொழிற்சங்கங்கள் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் போராட்டம்  நடத்தி கொண்டு இருக்கிறார்கள். மக்களுக்கு பாதிப்பு இல்லா வண்ணம் பேருந்துகள் இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் இயக்கப்படும். மக்கள் அச்சமின்றி பேருந்துகளில் பயணிக்கலாம். போராட்டம் என்பது அவரவர்களின் உரிமையாகும். அதனை செய்து கொண்டிரு இருக்கிறார்கள். காலை முதல் நான் அனைத்து போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். எந்த வழித்தடத்தில் பேருந்து இயங்கவில்லை என்பதை தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.