BSP Armstrong : பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல் காந்தி இரங்கல்..

”திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”

Continues below advertisement

பகுஜன் சமாஜ்வாதி கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை: அதிர்ச்சியையும், வருத்தத்தையும் பதிவு செய்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்

Continues below advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.

திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என எக்ஸ் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

ராகுல் காந்தி இரங்கல்:

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவரான திரு ஆம்ஸ்ட்ராங் கொடூரமான மற்றும் அருவருப்பான முறையில் கொல்லப்பட்டது ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Continues below advertisement