இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் வரும் மார்ச் 14ஆம் தேதி நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடர், தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்வதுடன் மத்திய - மாநில அரசு தொடர்பான சில முக்கிய முடிவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழக அரசுக்கும் மத்திய அரசுசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், தன்னுடைய முடிவை அமைச்சரவையில் ஆலோசித்து அதிகாரப்பூர்வமாக முதல்வர் அறிவிக்கவுள்ளார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிக்கின்றன.
மத்திய அரசுக்கு தரும் வரியை மாநில அரசான தமிழ்நாடு தர முடியாது என்று சொல்வதற்கு ஒரு நொடி போதும் என்று சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது இந்திய அளவில் விவாதிக்கப்பட்ட அம்சமாக மாறிய நிலையில், என்ன முடிவை எடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அமைச்சரவை கூட்டம் முடிந்த பின்னர், அவரே செய்தியாளர்களை சந்தித்து மத்திய அரசு தொடர்பான நிலைப்பாட்டை விளக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது