Breaking News LIVE | கோவையில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Breaking News LIVE in Tamil: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்..

ABP NADU Last Updated: 22 Nov 2021 12:57 PM
இனி வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் - உயர்கல்வித்துறை

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இனி வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் - உயர்கல்வித்துறை 

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவை இடமாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் - சீமான்

நீலகிரி மாவட்ட  ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவை இடமாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் - சீமான்

நான் எப்போதும் அதிகம் பேசமாட்டேன்; செயலில் எனது பணி இருக்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்


தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு மனிதனின் அரசாக திமுக அரசு இருக்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்


கோவையில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வர்

ரூ.89.73 கோடியில் முடிக்கப்பட்ட பணிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 

கோவையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவையில் ரூ.441.76 கோடியில் 23543 பேருக்கு நலத்திட்டட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 

கோவை: முதல்வர் படம் இல்லாத அரசு விழா!


குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர்


வீர் சக்ரா விருது பெற்றார் அபிநந்தன்

விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது - ஜனாதிபதி வழங்கினார் 





Breaking News Live உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்பு - விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமைச்செயலர், மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்பு

Chennai Rains: சில இடங்களில் கனமழை

சென்னையின் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது

சென்னையில் மீண்டும் மழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் மிதமான மழை - விட்டு விட்டு மழை பெய்து வருகிறது

Background

Tamil Nadu News LIVE


கர்நாடகாவின் உள்பகுதி அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக நேற்று சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கனமழையும், வட தமிழக கடலோர மாவட்டங்கள், அதையொட்டிய உள்மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது.


வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்தது. இதனால் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளது.


நாளை (நவம்பர் 23) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 24) தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், இதர மாவட்டங்கள்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.