தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். இளைய தளபதி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விஜய் தொடக்கத்தில் சாலிகிராமத்தில் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீலாங்கரையில் உள்ள சொகுசு பங்களாவில் தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.


இந்த நிலையில், சென்னையில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில், நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக, நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்துள்ளது.




இதையடுத்து, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் புவனேஸ்வரன் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இவரைப் பற்றி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.


அதாவது, புவனேஸ்வரன் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக அழைப்பு விடுத்து, அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாக வைத்திருப்பதை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இவர் தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்களின் வீடுகளுக்கு ஏற்கனவே பல முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.





நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தியாவிலும், ஜார்ஜியாவிலும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் படமாக்கப்பட்டுவிட்டது. 


மேலும் படிக்க : Kurup movie review: ரியலில் பரபரப்பான குருப்.. ரீலில் விறுவிறுப்பை கொடுத்தாரா? எப்படி இருக்கு குருப் படம்?


இதேபோல, கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் அஜித் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும், பின்னர் அந்த மிரட்டல் புரளி என்பதும் கண்டறியப்பட்டது. சமீபகாலமாக திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு அதிகளவில் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


‛என்னை யாரும் தேடாதீங்க...’ சியர்ஸ்... சொல்லி புறப்பட்ட மேக்ஸ்வெல்!


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண