செங்கல்பட்டு நீதிமன்ற வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசி  ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெடிகுண்டு வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிகுண்டு வீச்சில் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். 


நீதிமன்றம் அருகே உள்ள ஜூஸ் கடை அருகே நின்று கொண்டிருந்த பொழுது மர்ம கும்பல் அவர் மீது வெடிகுண்டு வீசி கண்மூடித்தனமாக வெட்டியுள்ளது.  முதற்கட்ட தகவலின் அடிப்படையில் படுகொலை செய்யப்பட்டவர் வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றத்தில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.