நாளை இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெறும் ஒருநாள் அடையாள உண்ணா நோன்பு அறப்போராட்டத்தில் தன்னால் கலந்துகொள்ள முடியாத காரணத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் அளித்த விளக்கக் குறிப்பில்,
அடைக்கும் தான் அற்ற அன்பிற்கும், அதிர் தேவோ பல், என்று வருவிருந்து நோக்கும் விருந்தோம்பல் பண்பிற்கும், புகழ் பெற்ற தமிழ் மண்ணில், நிகழ்கின்ற ஆட்சி, நம் பண்பாட்டை கலாச்சாரத்தை, ஒருமைப்பாட்டை, தேசப்பற்றை, மதநல்லிணக்கத்தை சகோதரத்துவத்தை, சிதைப்பதற்கான ஆட்சியாக நடைபெறுகிறது.
பிரித்து ஆட்சி செய்து பலனடையும் பிரித்தானிய கம்பெனியின் பாணியை பின்பற்றி, மக்களை சாதியாலும், மதத்தாலும், மொழியாலும், வழிபாட்டு முறைகளாலும், தமிழ் மக்களை துண்டாட ஒரு பெரும் சூழ்ச்சி பின்னப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று எண்ணப்பட்டிருக்கிறது.
வழிபாட்டுத் தலங்களை எல்லாம், மத அடையாளங்களை இழிவுபடுத்தும் நோக்கில் இடித்து தள்ளும் செயல்,அப்பாவி மாணலி லாவண்யாவின் மரணத்திற்கு நியாயங்களை மறுக்கும் செயல், சிறுபான்மையினரை விட சிறிய சமுதாயமான இறை பற்றாளர்களின் பூணூால் அறுக்க அறிவித்த செயல், பாஜக அலுவலகத்தில் குண்டு வீச்சு, மேதகு ஆளுநருடன் தொடரும் மோதல் போக்கு, தேர்தலில் கள்ள ஓட்டு, காவல்துறையில் திமுகவின் தலையீடு என்று தொடகும் ஆளும் கட்சியின் மக்கள் விரோத ஆட்சியை கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை 27-02-2022 ஒருநாள் அடையாள உண்ணா நோன்பு அறப்போராட்டம் நடைபெறுகிறது.
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன்சம்பத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணா நோன்பில் ஆயிரம் கணக்கானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடைபெறும் தேர்தலில் பணிகள் இருப்பதால் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை தங்கள் அருந்தொண்டும், அறப்போரும் வெற்றிபெற என் நல்வாழ்த்துக்கள்
இவ்வாறு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்