சென்னையில் “myHarvest Farms” நஞ்சில்லா காய்கறிகள்,பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை இயற்கை முறையில் விவசாயம் செய்து 3000 குடும்பங்களுக்கு வீட்டிலேயே விநியோகம் செய்து வருகிறோம். இதை விளம்பரப்படுத்தும் வகையில் கடைசி விவசாயி படத்தை திரையிட்டிருக்கிறோம் என்கின்றனர் இந்த இயற்கை விவசாய அமைப்பினர்.


”சென்னையில் “myHarvest Farms” மிகச் சிறிதளவில்  தொடங்கி கடந்த மூன்று வருடங்களாக நஞ்சில்லா காய்கறிகள்,பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை இயற்கை முறையில் விவசாயம் செய்து 3000 குடும்பங்களுக்கு வீட்டிலேயே விநியோகம் செய்து வருகிறோம். தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலத்தில் உள்ள கிட்டத்தட்ட 150 விவசாயிகளுடன் இளைய சமுதாயத்துடன் இணைந்து இயற்கை விவசாயம்  செய்து வருகிறோம். சமீபத்தில் வெளியான “கடைசி விவசாயி”  படத்தின் இயக்குநர்  திரு.மணிகண்டன் இப்படத்தில் விவசாயம் செய்பவர்களோ தெரிந்தவர்களோ மிக அரிது என்பதையும்  விவசாயத்துடன் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு நகரமயமாதலை நோக்கி செல்வதை உணர்த்தும் விதமாக எடுத்துள்ளார்.இந்த ஒரு சூழ்நிலையில்  நாம் விவசாயிகளுக்கு தோள் கொடுக்காவிட்டால் வருங்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதை இப்படம் உணர்த்துகிறது.


விவசாயம் சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும் “myHarvest Farms” விவசாயத்தை மீட்டெடுக்கும் குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறது. எங்களின் எண்ணங்களையும் நம்பிக்கையையும் பறைசாற்றும் விதமாக “ கடைசி விவசாயிபடத்தை  சிறப்பு திரையிடல் செய்து நமது 50 விவசாயிகள்  மற்றும் படத்தில் பணியாற்றிய படக்குழுவினரை சிறப்பிக்க திரையிட உள்ளோம். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்


இடம் : PVR Cinemas , சிறப்பு திரையிடல்.


Six Degree Sathyam Cinemas  ஞாயிறு காலை 8.00 மணி


myHarvest Farms” நிறுவனம்  “SPI Edge” நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியில்  நமது  நண்பர்கள் மற்றும் சில பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். படத்தில் நடித்த Dr. Raichal Rebacca வருகைதர உள்ளார். இவர்களுடன் நடிகர் ஆரி, நடிகர் ராஜ்மோகன், பாடகர் ஹரிஹரன்,நடிகர் வருண், பாடகர் நரேஷ் ஐயர், நடிகை VJ ரம்யா, இசையமைப்பாளர் தரண் குமார், பாடகி மாளவிகா சுந்தர் மற்றும் நடிகர் மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நம்முடன் இணைந்து இந்நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர். இளைய விவசாயிகளின் ஆதரவிற்காகவும் தங்கள் வருகைக்காகவும் அன்புள்ளத்துடன் அழைக்கிறோம்.பசுமையான மற்றும் ஆரோக்கியமான உலகத்தை உருவாக்க கைகோர்ப்போம்” என்று தெரிவித்துள்ளனர்