ஜோதிகா & சூர்யா தயாரிப்பில் சூர்யா, மணிகண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ஜெய் பீம். பத்திரிகையாளர் ஞானவேல் இயக்கியிருக்கும் இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. படத்தை பார்த்த ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் படத்தையும், படத்தில் பணியாற்றியவர்களையும் பாராட்டினர்.
இதற்கிடையே படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்ற காலண்டர் மூலம் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்திருப்பதாக சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு 9 கேள்விகள் எழுப்பி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
மேலும், அந்தக் கடிதத்தில், இந்தப் படத்தில் நீங்கள் உங்களின் வன்மத்தைக் காட்டினால், அடுத்து உங்களின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும்போது அவர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக்கூடும். இவை எதுவுமே தேவையில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். அன்புமணியின் இந்தக் கடிதத்தை படித்த ஒரு தரப்பினர் வன்னியர் இளைஞர்களை அவர் தவறாக வழிநடத்துகிறார் என்பதற்கு இதுவே சாட்சி என்று விமர்சனம் வைத்தனர்.
இதனையடுத்து அன்புமணி ராமதாஸுக்கு பதில் எழுதிய நடிகர் சூர்யா, “படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை’ என்கிற தங்களின் கருத்தை முழுவதுமாய் நன ஏற்கிறேன். அதே போல ‘படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும்’ என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் ஜெய் பீம் படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜெய்பீம் நல்ல படம். ஆனால் இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம். எந்தவொரு சமுதாயத்தையும் காயப்படுத்தாமல் ஜெய் பீம் படம் அமைந்திருக்கலாம். ஆனாலும் அது ஒரு பார்க்க வேண்டிய படம்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Ajith whats app status | இதுதான் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்.. சோஷியல் மீடியாவில் ஷேர் செய்த வலிமை பட நடிகர்!
குழந்தைகள் தின ஸ்பெஷல் ! உங்கள் வீட்டு சுட்டிகளை மகிழ்விக்க வரும் டாப் 5 திரைப்படங்கள்!