வலிமை படத்தில் அஜித்திற்கு சகோதரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராஜ் ஐயப்பா நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
கிளிம்ஸ் காட்சிகளுக்கு பிறகு படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வரவில்லை என்றாலும் அஜித் இந்திய அளவில் மேற்கொண்ட பயணம் தொடர்பான புகைப்படங்கள், படப்பிடிப்பு சம்பந்தமான புகைப்படங்களும் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது அஜித் சம்மந்தமான ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் அதுதான் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ். இந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை வலிமை படத்தில் அஜித் சகோதரராக நடிக்கும் ராஜ் ஐயப்பா தனது ட்விட்டர் பககத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், “ ஏழை நடுத்தர வர்க்கம், பணக்காரர் ஆகியவை ஒருவரின் பொருளாதாரம் நிலை. அவரது குணம் கிடையாது. நல்லவர் மற்றும் கெட்டவர் எல்லா தரப்பிலும் இருக்கிறார்கள். ஒருவருடைய பொருளாதார நிலையை வைத்து அவரது குணத்தை முடிவு செய்யாதீர்கள் விழித்துக்கொள்ளுங்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை அஜித்தின் அனுமதியோடு வெளியிட்டுள்ளதாக ராஜ் ஐயப்பா அதில் அவர் தெரிவித்துள்ளார். அமராவதி படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த பானு பிரகாஷின் மகன் ராஜ் ஐயப்பா ஆவார். இவர் முன்னதாக அதர்வாவின் 100 படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அஜித் நடித்துள்ள வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஹூமா குரேஷி, பேர்ல் மானே, யோகி பாபு, கார்த்திகேய கும்மகொண்டா, ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு பில்லா 1, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களில் அஜித்துடன் பணியாற்றிய நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வலிமைப் படத்தின் படப்பிடிப்பு முன்னதாகவே தொடங்கிய நிலையில் அது கொரோனா பரவல் காரணமாக தடைபட்டது. தொடர்ந்து படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே போனதாலும், கொரோனா பரவல் சூழ்நிலை கருதியும் படக்குழு படம் குறித்தான எந்த அப்டேட்டையும் வெளியிடவில்லை. இதனால் வெறுத்து போன அஜித் ரசிகர்கள் செல்லும் இடமெல்லாம் வலிமை அப்டேட்டைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில்தான் வலிமை படத்திலிருந்து டீசர் வெளியிடப்பட்டது. அதன் கூடவே வலிமைப் படத்தின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து வலிமைப் படத்திலிருந்து “ நாங்க வேற மாறி” பாடல் வெளியானது.
இந்தப் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் வலிமை படத்தில் இருந்து கிளிம்ஸ் காட்சிகளும் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற அதிகாரப் பூர்வ தகவலும் வெளியானது. படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் அர்ஜூன் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார் என்பது தெரிய வந்தது.