பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைபடுவார் என இசைஞானி இளையராஜா எழுதியதாக கூறப்படும் வரிகளுக்கு ஆதரவும், தற்போது கடும் எதிர்ப்பும் கிளப்பி வந்தது. மேலும், ஒரு சிலர் இளையராஜா மத்திய அரசு வழங்கும் எம்பி பதவிக்கு ஆசைப்பட்டுதான் அம்பேத்கரையும், மோடியையும் ஒன்றாக இணைத்து பேசினார் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.
தொடர்ந்து, இதுகுறித்து பேசிய இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என இளையராஜா கூறினார். தனக்கு எதிரான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதாகவும் என்னிடம் இளையராஜா கூறினார். மற்றவர்கள் எப்படி கருத்து கூறுகிறார்களோ அதேபோல்தான் கருத்தைக் கூறினேன் என்றார். தான் பதவி வாங்குவதற்காக மோடியை புகழவில்லை. தான் கட்சிக்காரர் இல்லை என்றும் கூறினார். அம்பேத்கரையும் பிடிக்கும், மோடியையும் பிடிக்கும். அதனால் ஒப்பிட்டு பேசினேன் என்று இளையராஜா கூறினார்” என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போரூரில் செய்தியாளர்கள் சந்தித்த பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறுகையில், “குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கும் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கும் பாஜகவிற்கும் சம்பந்தம் இல்லை. அதைப் பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. இளையராஜா பாஜகவை சார்ந்தவர் அல்ல எனவே பாஜகவின் சார்பில் ராஜ்யசபா எம்பி ஆக்குவார்கள் என சொல்லமுடியாது தயவு செய்து இதனை அரசியலாக்க வேண்டாம். இளையராஜாவிற்கு பாரத ரத்னாராஜாவிற்கு பாரத ரத்னா கொடுக்கவேண்டும்.
இளையராஜாவுக்கு பாரதரத்னா கொடுப்பது தான் பொருத்தமாக இருக்கும்.இளையராஜாவிற்கு எம்பி பதவி கொடுத்து அடக்கிவிட வேண்டாம், பாரத ரத்னா கொடுத்து கௌரவிக்கப்பட்ட வேண்டும். இதுகுறித்து தேவைப்பட்டால் பாஜக தலைமைக்கு கடிதம் எழுத தமிழக பாஜக தயாராக உள்ளது. ஏகே ராஜன் கமிட்டியின் அறிக்கையை ஏற்று கொள்ள முடியவில்லை. அதில் தொழில்நுட்ப குறைபாடுகள் உள்ளன.திருவாடுதுறை செல்லும் கவர்னருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு காட்டுவது தவறு.அதிகாரத்தை பயன்படுத்தி கவர்னரை மிரட்டுகிறார்கள். தேவைக்கு ஏற்றார் போல சட்டத்துக்கு புறம்பாக எவ்வாறு செயல்பட முடியும். கவர்னரை தடுத்து நிறுத்தினால், விளைவுகள் மோசமாக இருக்கும். மம்தா, தாக்கரே, கே.சி.ஆர், மு.க ஸ்டாலின் போன்றவர்கள் கவர்னர்களை குற்றம் சொல்ல என்ன தகுதி உள்ளது.
புளூ கிராஃப் பவுண்டேசன் பதிப்பித்த புத்தகத்தில் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அம்பேத்கரை வைத்து அரசியல் மட்டும் செய்யும் கட்சிகள், எழுத்தாளர்கள், இடதுசாரிகள் எதிர் கருத்து தெரிவித்தும், இளையராஜாவை மோசமாக விமர்சித்தும் பேசுகிறார்கள். திமுக ஐடி விங் டிரெண்ட் செய்தனர். அதனால் தான் கேள்வி கேட்கிறோம். சமூக நீதி பேசும் நீங்களே சொல்லும் கருத்தை புறகணிக்கலாமா. இது போலி சமூக நீதி. நான் போட்ட மெட்டுகளை எப்படி திரும்ப பெற மாட்டேனோ, அதே போல தனது கருத்தையும் திரும்ப பெற மாட்டேன் என இளையராஜா கூறியுள்ளார்.
கோவில்களில் VVIP தரிசனம் கிடையாது என அரசு ஒரு திட்டத்தை போட்டால் அதை ஆதரிக்கும் முதல் கட்சி பாஜகவாக தான் இருக்கும்.யுவன் சங்கர் ராஜாவை விட கருப்பு நான். நானும் கருப்பு திராவிடன் தான். எனக்கு சத்தியமாக இந்தி தெரியாது. அவர் கருப்பு தான், ஆனால் நான் அண்டங்காக்கை கருப்பு” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்