Bank Holidays 2022 August: பொதுவாக இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் அதிக எண்ணிக்கையிலான விடுமுறை நாள்களைக் கொண்டுள்ளன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் விடுமுறை
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் மட்டும் 15 நாள்கள் வங்கி விடுமுறை வழங்கப்பட்டது. வங்கிகளுக்கு எல்லா ஞாயிற்றுக் கிழமைகளும் விடுமுறை அளிக்கப்படுவது தவிர, ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனி மற்றும் நான்காம் சனிக் கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும் இவை தவிர மாநில வாரியான உள்ளூர் விடுமுறை, மத பண்டிகை நாள்களிலும் விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில், வரும் ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த நாள்களில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகின்றன என்பது குறித்து பார்க்கலாம்.
10 நாள்கள் விடுமுறை
வரும் ஆகஸ்ட் மாதத்தில் வார இறுதி நாள்கள் மற்றும் இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகள் தவிர,
ஆகஸ்ட் 9 - மொஹரம்
ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம்
ஆகஸ்ட் 19 - ஜென்மாஷ்டமி
ஆகஸ்ட் 31 - விநாயகர் சதுர்த்தி ஆகிய நான்கு நாள்கள் கூடுதல் விடுமுறை நாள்கள் என மொத்தம் 10 நாள்கள் ஆகஸ்ட் மாதத்தில் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்கள் கவனத்துக்கு...
ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாள்கள் பட்டியலின்படி இந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 14 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரும்பாலான வங்கி சார்ந்த பணிகள் தற்போது ஆன்லைன் மூலமாக செய்யப்பட்டு வரும் நிலையில், வங்கிக்கு நேரடியாகச் சென்று சேவைகளைப் பெறுபவர்களுக்கு மட்டுமே இது இடையூறாக இருக்கும் நிலையிலும், விடுமுறைக்குப் பிறகு வங்கிகள் திறக்கப்படும் போது கூட்டம் அலைமோதும் என்பதால், முன்கூட்டியே வங்கிப்பணிகளை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: Euro Millions Lottery : லாட்டரியில் 1593.55 கோடி ரூபாய் பரிசு... பெயர் தெரியாத நபரைத் தேடும் ஐரோப்பா.. இப்படி ஒரு கதையா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்