நீர்வளத்துறை சார்பில் மூன்று கோடி 74 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குடியிருப்பு வீடுகளுக்கான ஆணையினை சட்டமன்ற உறுப்பினர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நீர்வளத் துறை சார்பில் ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் கீழ் மூன்று கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் குடியிருப்பு வீடுகளுக்கான ஆணையினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கூட்டி கலைவாணன் பயனாளிகளுக்கு வழங்கினார். ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் காவிரி டெல்டாவில் உள்ள வெண்ணாறு உபவடிநித்தைச் சேர்ந்த அரிச்சந்திரா நதி அடப்பறு பாண்டவையாறு வெள்ளையாறு உள்ளிட்ட ஆறு ஆறுகளையும் அதன் உள்கட்டமைப்பு முதலீடுகள் பாசன வசதி பெறும் நிலங்களின் நீர் மேலாண்மை மற்றும் வெள்ள ஆபத்து குறைப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து மேம்படுத்துவதற்காக 960.66 கோடி திட்ட மதிப்பீட்டில் முதல் கட்ட பணியாக திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெண்ணாறு உபவடிநில ஆறுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் 78000 ஹெக்டேர் பாசன நிலங்கள் மேம்படுத்தப்பட்டும் மற்றும் 13 மின் இரவை பாசன திட்டங்களை மறு நிர்ணயம் செய்யப்பட்டும் பணிகள் முடிவு பெற்றுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ஆறு கால்வாய் மற்றும் வடிகால் கரைகளில் உள்ள அனைத்து வித ஆக்கிரமிப்புகளையும் அகற்றிட வேண்டி உரிய கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 1237 குடும்பங்கள் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டது. அதில் 486 நபர்களுக்கு 7 கோடியே 76 லட்சத்து 65, 935 இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டது. எஞ்சிய 751 நபர்களின் வாழ்வாதாரம் மற்றும் மீள்குடியேற்ற செயல்பாட்டிற்காக குடியிருப்பு வீடுகள் 71 கோடியே 34 லட்சத்து,50,000 திட்ட மதிப்பீட்டில் வீடுகள் கட்ட திருவாரூர் மாவட்டத்தில் 27 இடங்களில் அரசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் முதன் கட்டமாக திருவாரூர் மாவட்டத்தில் பின்னவாசல் வெங்காரம் பேரையூர் புழுதிக்குடி வேலூர் மணலி கொக்காலடி கொற்கை தலைக்காடு திட்டாணிமுட்டம் விக்கிரபாண்டியம் திருவிடைவாசல் பள்ளிவர்த்தி மற்றும் ஆத்தூர் ராதாநல்லூர் மற்றும் அதங்குடி உள்ளிட்ட 27 மில் குடியேற்ற தலங்களில் 684 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திட்டாணிமுட்டம் கண்கொடுத்த வணிகம் பள்ளிவர்த்தி ஆலிவளம் மாவூர் பின்னவாசல் மற்றும் கொற்கை ஆகிய ஏழு மீல் குடியேற்ற தலங்களில் 34 பயனாளிகளுக்கு மூன்று கோடியே 74 லட்சம் மதிப்பீட்டிலான குடியிருப்பு வீட்டு சாவிகளும் வீட்டிற்க்கான உரிம ஆணைகளும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் அவர்களால் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்