கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.


 




 


முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனை யொட்டி விழிப்புணர்வு தினத்தை  கடைபிடிக்கும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து தாந்தோணி அரசு கலைக்கல்லூரி வரை சென்றடையும்  இப்பேரணியில் இளைஞர்களை சிந்திப்பீர் நாளை நீங்களும் முதியோரே, மூத்தோர் சொல்லும் முழு நெல்லியும் முன் துவர்க்கும் பின் இனிக்கும், அன்பால் ஆதரவால் மட்டுமே முதுமையே வெல்ல முடியும், வயதின் முதிர்வே மட்டுமல்ல வாழ்க்கையின் முதிர்வையின் கண்டவர்கள் முதியோர், வீட்டின் பெயர் அன்னை இல்லம்; அன்னை இருக்கும் இடம் முதியோர் இல்லம்;


 




 


முதியோரே வீட்டின் மூத்த குழந்தைகள் அன்பு செய்வீர் இளையோர் என்ற பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆகையால் இளையோர்களை முதியோர்கள் வீட்டின் மூத்த குழந்தைகள் அன்பு செய்வீர் அரவணைப்பீர் அது நம் கடமை என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார். முன்னதாக முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி மாணவிகள் மற்றும் துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.


 




 


தொடர்ந்து முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற   மாணவிகளுக்கு ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.  மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் ஷிலாசாந்தி, தனித்துணை ஆட்சியர் (சபாதி சைபுதீன், கண்காணிப்பாளர் வினோத் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.