AI தொழில் நுட்பம் மூலம் Spam அழைப்புகள் கண்டுபிடிப்பு ;
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகளை கண்டறிந்து எச்சரிக்கும் சேவை குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்தியாவின் முன்னணி மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஏர்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களின் சேவைக்காக AI தொழில்நுட்பம் மூலம் கடந்த 12 நாட்களில் ஸ்பேம் கண்டறியும் சேவையை துவங்கியது.
Spam Calls - SMS தடுக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு நாளும் பயனாளிகளுக்கு ஸ்பேம் அழைப்புகளும், ஸ்பேம் குறுஞ்செய்திகளும் வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் 112 மில்லியன் நிகழும் சாத்தியம் கொண்ட ஸ்பேம் அழைப்புகளையும் 3 மில்லியன் ஸ்பேம் SMS செய்திகளையும் வெற்றிகரமாகக் கண்டறிந்து தடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அந்த ஸ்பேம் பாதிப்புகளில் இருந்து தங்கள் நெட்வொர்க் பயனாளிகளை ( வாடிக்கையாளர்களை பாதுகாக்க) ஏர்டெல் நிறுவனம், சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டு AI தொழில் நுட்பத்தால், வாடிக்கையாளர்களுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகள் வரும் போது முன்னெச்சரிக்கையாக "ஸ்பேம் கால்" என்று எச்சரிக்கை ( Alert) செய்யும் வகையிலான சேவையை ஏர்டெல் துவக்கியுள்ளது.
இது குறித்து ஏர்டெல் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைமைச் செயல் அதிகாரி தருண் விர்மாணி கூறும் போது ;
இன்றைய டிஜிட்டல் லேண்ட்ஸ்கேப்பில் ஸ்பேம் அழைப்புகளும் சந்தேகத்திற்குரிய உரைகளும் வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் கவலை தரும் விஷயமாக உள்ளன. இதற்குத் தீர்வு காண ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் எக்கோசிஸ்டத்தில் தங்கு தடை இல்லாமல் இயங்கும் ஒருங்கிணைக்கப்பட்ட நவீன AI தொழில்நுட்பத்தில் ஒரு தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான சேவை வழங்குவதுடன்
தமிழ்நாட்டில் உள்ள 29.8 மில்லியன் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் சிறந்த மன அமைதியுடன் இருக்க இது உதவுகிறது. இந்தப் புதுமையான சலுகையின் மூலம் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை நம்பிக்கைக்கு உரியதாக உறுதிப்படுத்தி தொலைத்தொடர்பு தொழில்துறையில் ஒரு புதிய தரத்தை உருவாக்கியுள்ளது என்றார்.
அவரை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஏர்டெல் நிறுவனத்தின் வர்த்தக தலைமை அதிகாரி பிரிஜேஸ் கூறுகையில் ,
தமிழ்நாட்டில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி. இன்றைக்கு தொலைபேசி அழைப்புகள் மற்றும் மெசேஜ் மூலம் ஸ்பேம் வாடிக்கையாளர்களுக்கு பல விதங்களில் தொல்லையை கொடுக்கிறது.
இந்தியாவின் முதல் முறையாக ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு Anti Spam வசதியை முற்றிலும் இலவசமாக அறிவித்திருக்கிறோம். ஸ்பேமர்ஸ் பயன்படுத்தும் டெக்னாலஜி மூலம் முழுமையாக ஸ்பேமை பிரிக்கிறோம். இதை துவங்கிய 10 நாட்களில் 11 கோடி அழைப்புகளை ( Spam Calls ) என்று வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம்.
விரைவில் பிற மொழிகளிலும் Spam Call அலர்ட்
வரும் அழைப்புகள் ஸ்பேம் அழைப்பா அல்லது ஸ்பேம் மெசேஜா என்பதை மையப்படுத்தி பயனாளர்களுக்கு அதை தெரியப்படுத்துகிறோம் என்றும் தமிழ்நாட்டில் 3 கோடி ஏர்டெல் வாடிக்கையாளர்களின் இந்த ஸ்பேம் தடுப்பு மூலம் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
Spam தொடர்பான எச்சரிக்கை தகவல்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டும் கொடுத்து வருவதாகவும் வருங்காலத்தில் பயனாளிகளின் வசதிக்கு ஏற்ப பிற மொழிகளிலும் அலார்ட் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்