திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி பாஸ்கர். இவரை அந்த மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  ஞானதிரவியம் மற்றும் அவருடன் வந்தவர்களும் நேற்று தாக்கியதாக நேற்று பாரதிய ஜனதாவினர் புகார் தெரிவித்தனர்.

Continues below advertisement

மேலும் தாக்கிய எம்.பி. பிறகு சிசிடிவி காமிராவை உடைத்ததாகவும் ஆனால் அவர் மீது முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனப் புகார் எழுந்தது. இதையடுத்து பாரதிய ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரான பொன்.ராதாகிருஷ்ணன் பாஸ்கருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் ஞானதிரவியம் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டார். பலமணிநேர போராட்டத்துக்குப் பிறகு போலீசார் அவரைக் கைது செய்தனர் மேலும் ஞானதிரவியம் மீதும் முதல் தகவல் அறிக்கை தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பாரதிய ஜனதா தலைமையும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.