திருநெல்வேலி மாவட்டத்தில் கைதிகளில் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
முன்னதாக பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட கைதிகளில் பற்களை கற்களால் தாக்கி உடைத்ததாக பல்வீர் சிங் புகார் எழுந்தது. இதையடுத்து, ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது 4 பிரிவுகளில் கீழ் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை வழக்கு பதியப்பட்டது.