கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 350 க்கு மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.




தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. 




இதில் தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடிகளில் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் நலன் கருதி கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது போல் அங்கன்வாடி மையங்களுக்கும் மே மாதம் விடுமுறை விட வேண்டும், அங்கன்வாடி பணியாளர்கள் கூடுதல் மையங்களை பார்த்துக் கொள்ள கூறும் கூடுதல் பணிச் சுமையை நிறுத்தி, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், 




தமிழகம் முழுவதும் சிலிண்டர் பில்லில் உள்ளபடி ரூபாய் 1205 வழங்க வேண்டும், மின் கட்டணங்களை அரசே ஏற்று கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 350க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.


கரூர் ராயனூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி முகாம் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் செயல்பட்டு வருகிறது. 1990ம் ஆண்டு இந்த முகாம் அமைக்கப்பட்டு இதில் 434 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு 60 நபர்களுக்கு வீடுகள் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில் மற்றவர்கள் தற்காலிக வீடுகளை அவர்களே கட்டிக் கொண்டு வசித்து வருகின்றனர். 


15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதால் வீடுகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. பழுதடைந்த வீடுகளை பராமரிப்பு செய்து தர வேண்டும், மழைநீர் முகாம் வழியாக சென்று தேங்க கூடிய நிலை இருப்பதால் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது அவற்றை சரி செய்து தர வேண்டும், முறையான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு அட்டையை புதுப்பித்து தர வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த மனுவினை முகாமை சார்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துச் சென்றனர்.


பழுதடைந்த மின் கம்பம் அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்


கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ளது. சின்னண்டார் கோயில் தெரு இப்பகுதியில் ஏராளமான குடியிருப்பு வாசிகள் குடியிருந்து வருகின்றனர்.இந்த தெருவின் நுழைவுப் பகுதியில் கழிவுநீர் சாக்கடை ஓரம் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மின்கம்பம் உள்ளது. ஏராளமான வீட்டு இணைப்புகளும் உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி கழிவுநீர் சாக்கடை பகுதியில் பழுதடைந்து கான்கிரீட் கம்பிகள் தெரியும் அளவிற்கு உள்ளது. மேலும் எப்போதும் தெருவில் குழந்தைகள் மாலை நேரங்களில் விளையாடுவது வழக்கமாக இருந்து வருகின்றனர்.மேலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த குறுகிய பாதையில் நடந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள மின்கம்பம் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் எந்நேரமும் ஆபத்து விளைவிக்கக்கூடிய நிலையில் வலுவில் இருந்து காணப்படுகிறது. மேலும் குழந்தைகள் பெரியவர்கள் மிகுந்த அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் மின்வாரிய அதிகாரிகள் தனிக்கவன ம் செலுத்தி சென்னாண்டார் தெருவில் நுழைவுப் பகுதியில் பழுதடைந்த நிலையில் கழிவுநீர் சாக்கடை அருகே உள்ள மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.