பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவரது வீட்டின் முன்பு சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது கொலை தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் 8 பேர் சரண் அடைந்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு தக்க தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.


ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்டது ஏன்?


இந்த சூழலில், சரண் அடைந்தவர்களில் ஒருவரான ரவுடி திருவேங்கடத்தை போலீசார் என்கவுன்டரில் இன்று காலை சுட்டுக்கொன்றனர். இந்த சூழலில், ரவுடி திருவேங்கடத்தை என்கவுன்டர் செய்தது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.


போலீசார் அளித்துள்ள விளக்கத்தில், கொலையாளிகளில் ஒருவரான திருவேங்கடத்தை விசாரணைக்காக இன்று காலை புழல் நோக்கி அழைத்துச் சென்றனர். அப்போது, மாதவரம் ஆட்டுத்தொட்டி அருகே செல்லும்போது திருவேங்கடம் தப்பி ஓடியுள்ளார். கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அவரை் தேடும்போது, புழல் வெஜிடேரியன் நகரில் உள்ள தகர கொட்டகையில் திருவேங்கடம் பதுங்கினார்.


கொலைச்சதித் தீட்டம்:


போலீசார் சுற்றி வளைக்கும்போது ஏற்கனவே அங்கு பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து திருவேங்கடம் சுட்டுள்ளார். இதையடுத்து, ரவுடி திருவேங்கடத்தை காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், ரவுடி திருவேங்கடத்தின் வயிறு மற்றும் மார்பில் குண்டு பாய்ந்தது.


மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர் என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். திருவேங்கடம் பதுங்கியிருந்த தகர கொட்டகையில்தான் ஆம்ஸ்ட்ராங் கொலைச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.


ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு சென்னை காவல் ஆணையர் சந்தீப் ரத்தோரை மாற்றிவிட்டு, அவருக்கு பதிலாக அருண் ஐ.பி.எஸ்.-ஐ நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Donald Trump Shot: டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு - பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களிடமிருந்து குவியும் கண்டனங்கள்


மேலும் படிக்க: Chennai Encounter: சென்னையில் பரபரப்பு - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - போலீசாரின் என்கவுண்டரில் ரவுடி திருவேங்கடம் சுட்டுக்கொலை