நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
1. நாடுமுழுவதும் கோவிட் 19-க்கான தடுப்பூசித் திருவிழா நேற்று தொடங்கியது. 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்யும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. வரும் 14 ஆம் தேதிவரை நடைபெறவுள்ள இந்த தடுப்பூசித் திருவிழா கோவிட் 19 –க்கு எதிரான இரண்டாவது பெரிய போர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
2. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவ் ராவ் நேற்று காலை கொரோனா நோய்த் தொற்றால் காலமானார்.
3. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றும், தேர்தலில் மாதவ் ராவ் வெற்றி பெற்றhல், அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
4. ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 10 ரன் வித்தியாசத்தில் பெற்றி பெற்றது.
5. இன்று இரவு 7-30 மணிக்கு மும்பையில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.
6. தற்போதை கொவிட் அதிகரிப்பு சூழலை கருத்தில் கொண்டு, இந்தியாவில் கொவிட் நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்படும் வரை, ரெம்டெசிவர் ஊசி மற்றும் ரெம்டெசிவர் ஆக்டிவ் மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
7. டெல்லியில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது. திருமணம் மற்றும் இறுதி ஊர்வலங்கள் தவிர அனைத்து வித கூட்டங்களுக்கும் அம்மாநில அரசு இம்மாதம் 30ம் தேதி வரை தடை விதித்துள்ளது.
திருமண விழாக்களில் 50 நபர்களுக்கும், இறுதி ஊர்வலத்தில் 20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
8. 'நாங்கள் திருமாவுடன் நிற்கிறோம்' என சமூகவலைத் தளங்களில் பேராதரவு நல்கிய கல்வியாற் சிறந்த பெருமக்கள் யாவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. மனிதநேய உணர்வையும் சமத்துவப் பார்வையையும் வழங்குவதே நனிசிறந்த கல்வி. அத்தகைய உணர்வோடும் பார்வையோடும் ஊக்கமளித்த கற்றோர் அனைவருக்கும் நன்றி.
படிக்காதவர்கள் என்னும் சொல்லாடல் ஆணவத்தின் வெளிப்பாடாகும். அவர்கள் கல்விபெற வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் அல்லது வாய்ப்பை இழந்தவர்கள். அதனால் அவர்கள் இழிவானவர்கள் அல்ல என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
9. சென்னை அம்பத்தூரில் தேர்தலின்போது வாக்காளர்களுக்குக் கொடுத்த டோக்கனுக்கு தற்போது அதிமுகவினர் பணம் விநியோகிப்பதாக புகார் எழுந்ததன்பேரில், அக்கட்சியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10. ஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியா 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது