நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பிறகு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம்(Jayalalithaa Death) குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம்(O Panneerselvam) நேற்று ஆஜரானார்.
நேற்று முதல் நாளில் 3 மணிநேரம் நடைபெற்ற விசாரணையில், ஓ.பி.எஸ்ஸிடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்நிலையில் இரண்டாவது நாளாக ஆஜரான ஓபிஎஸ், திருபரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி பேரவை இடைத்தேர்தல் படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது தெரியும் என தெரிவித்துள்ளார்.
நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 2016 செப்டம்பர் 22ஆம் தேதி, ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரம் தனக்கு தெரியாது எனவும், ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது என்பதை தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எதுவும் தெரியாது எனவும் ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது? எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரமும் தனக்கு தெரியாது என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்தார்.
இந்நிலையில், விசாரணயின்போது ஓபிஎஸ்ஸிடம் மருத்துவம் சார்ந்த கேள்விகளை கேட்கும்போது, மருத்துவர்கள் உடன் இருக்கவேண்டும் என அப்போலோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடந்த 12ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. பல முறை ஆணையம் ஓபிஎஸ்க்கு சம்மன் அனுப்பியும் அவர் ஒரு முறை கூட நேரில் ஆஜராகமல் இருந்தார். இதுவரை 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத அவர், 9வது முறையாக அனுப்பப்பட்ட பிறகு நேற்று நேரில் ஆஜரானார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
பேஸ்புக் பக்கத்தில் தொடர
ட்விட்டர் பக்கத்தில் தொடர
யூடியூபில் வீடியோக்களை காண