முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அவர் இணைந்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ஓராண்டுக்கு முன் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


கட்சியில் மீண்டும் இணைந்ததை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ” நான் எப்போதும் அதிமுகவை சேர்ந்தவன் தான். ஓராண்டுக்கு முன் நீக்கி வைப்பட்டிருந்தேன், தற்போது கட்சி விதிகளுக்கு உட்பட்டு மீண்டும் இணைந்துள்ளேன். ஒரு மிகப்பெரிய குழுவில் இருக்கும் தலைவனை ஒத்து இருப்பவன் வாழ்வதற்கு சமம், அப்படி இல்லாதவன்  செத்ததற்கு சமம் என திருவள்ளுவர் கூறியுள்ளார். அதிமுக மாபெரும் இயக்கம். அதிமுக தொடங்கிய காலம் முதல் பல பதவிகளை முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா எனக்கு வழங்கினார்கள். இடையில் சிறு சருக்கல் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு, தற்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இணைந்துள்ளேன். கட்சியில் சட்டவிதிகள் என்ன என்பது எனக்கு தெரியும். அதனை ஏற்று அதன்படி நடந்துக்கொள்வேன்” என குறிப்பிட்டார்.


மேலும், “  ஒரு கட்சி பிற கட்சியை விமர்சனம் செய்வது வேறு, கூட்டணி என்பது வேறு. இன்றளவும் பா.ஜ.கவில் இருக்கும் நபர்கள் அதிமுகவை விமர்சனம் செய்கின்றனர். ஆனால் கூட்டணியில் இருக்க வேண்டுமா என்பது அந்தந்த கட்சியின் தலைவர்கள் முடிவு எடுக்க வேண்டும். காங்கிரஸை தவிர அனைத்து கட்சியினரும் பாஜகவில் கூட்டணி வைத்துள்ளனர். 4 அண்டுகள் பாஜக ஆட்சியில் திமுக இடம்பெற்றது. இலாகா இல்லாத அமைச்சராக முரசொலி மாறன் 1.5 ஆண்டுகள் இருந்தார். அவரது இறுதி சடங்கில் கலந்துக்கொள்ள வாஜ்பாய் வந்தார். அப்படி பின்னிப்பிணைந்து திமுக இருந்தது. ஆனால் நாங்கள் அப்படி இல்லை. எங்கள் கொள்கைக்கு எதாவது இடர்பாடு ஏற்படுமேயானால் அதிமுக கூட்டணியில் இருந்து விலக தயங்கியது இல்லை. ஒற்றை பெண்மனியாக டெல்லிக்கு சென்று பாஜக ஆட்சியை கவிழ்த்த பின் தமிழ்நாடு திரும்பியவர் ஜெயலலிதா. நான் கட்சியில் இல்லை என்றாலும் கட்சிக்காரனாக தான் செய்லபட்டு வந்தேன். கட்சியில் எனக்கு எந்த முக்கியத்துவமும் தேவையில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும்” என தெரிவித்தார்.


Crime: அடக்கொடுமையே! மனைவியின் விரலை கடித்து தின்ற கணவன்; கோபத்தால் வெறிச்செயல்...பெங்களூருவில் ஷாக்!


NLC Issue: இன்று முதல் சேதமடைந்த பயிருக்கு இழப்பீட்டு தொகையை விவசாயிகள் பெறலாம் - என்.எல்.சி அறிவிப்பு


Actor Vijay: 'சூப்பர் ஸ்டார் விஜய்’ .. அன்றே சொன்ன அக்‌ஷய்குமார்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!