கள்ளக்குறிச்சி மாணவி உடல் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு

முன்னும், பின்னும் காவல்துறை வாகனங்கள் பாதுகாப்போடு சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியது.

Continues below advertisement

கள்ளகுறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடலை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Continues below advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூரில் செயல்படும் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சட்டப்போராட்டம் நடத்திய  அவரது பெற்றோர்  நீதிபதியின் அறிவுறுத்தலுக்குப் பிறகு உடலை பெற்றுக்கொள்வதாக நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ளுமாறும், நாளை மாலைக்குள் இறுதிச்சடங்குகளை முடிக்கும்படியும் நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்தார். 

அதன்படி இன்று காலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனையில் ஸ்ரீமதியின் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக மாணவியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாவட்ட ஆட்சியர் ஷவரன் குமார் ஜடாவத், வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.இதனையடுத்து மாணவியின் உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்பட்டு மாணவியின் உடல் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

முன்னும், பின்னும் காவல்துறை வாகனங்கள் பாதுகாப்போடு சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியது. இதில் வாகனத்தின் முன்பகுதியில் சிறிது சேதம் ஏற்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனம் பிரேக் போட்ட போது முன்னால் சென்று கொண்டிருந்த போலீஸ் வாகனம் மீது மோதியது. இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் இறங்கி விசாரணை நடத்தினர். பின்னர் சிறிது நேரத்தில் கழித்து அங்கிருந்து கிளம்பிய ஆம்புலன்ஸ்  வாகனம் மாணவியின் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தது. 

முன்னதாக  கள்ளக்குறிச்சி பகுதியில் வன்முறை சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கவும், போராட்டம் நடத்துபவர்களை கைது செய்யவும் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனை வளாகத்திலும் 500க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பெரிய நெசலூர் கிராமத்தில் அசம்பாவிதம் சம்பவங்கள் நிகழாமல் இருக்க 800க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவியின் இறுதிச்சடங்கில் உறவினர்கள்,  உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

Continues below advertisement