கரூர் அமராவதி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதையொட்டி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆண்டாங் கோவில் தடுப்பணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு: அமராவதி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் கழுகு பார்வை காட்சி.




திருப்பூர் மாவட்டம், உடுமைப்பேட்டை அமராவதி அணை முழுக் கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் அணைக்கு வரும் உபரி நீர் அணையிலிருந்து அமராவதி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அந்த உபரி நீருடன் கடந்த 2 நாட்களாக திருப்பூர், திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பெய்த கனமழை நீரும் சேர்ந்து அமராவதி ஆற்றில் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.


இதையும் படிங்க: மேடையிலே போஸ் வெங்கட்டை பொளந்து கட்டிய தவெக நிர்வாகி! அப்படி என்ன சொன்னாரு?



அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று நள்ளிரவு கரூர், ஆண்டாங்கோவில் தடுப்பணையை கடந்த நிலையில் தற்போது கரூர் மாநகரை கடந்து சென்று கொண்டுள்ளது. வருடம் முழுவதும் வறண்டே கிடக்கும் இந்த ஆற்றில் தற்போது இரு கரை புரண்டு தண்ணீர் சென்று கொண்டுள்ளது. 


இதையும் படிங்க: Thanjavur : தூர்வாரப்படாத ஏரிகள்.. நீரில் மூழ்கிய பயிர்கள்! வேதனையில் விவசாயிகள்..




 


ஆண்டான்கோவில் தடுப்பணையில் இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 75,751 கன அடி தண்ணீர் கடந்து சென்று கொண்டுள்ளது.  இந்த தண்ணீர் அப்படியே முழுவதுமாக திருமுக்கூடலூர் எனும் இடத்தில் காவிரி ஆற்றில் கலந்து சென்று கொண்டுள்ளது. 



மேலும், அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த நிலையில், ஆண்டாங்கோவில் தடுப்பணையில் அளவுக்கு அதிகமான நீர் வெளியேறி வருவதால் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் சற்றுமுன் அணையை நேரில் பார்வையிட்டார்.




ட்ரோன் மூலம் கண்காணிப்பு :


அதேபோல், பாதிப்புகள் இருப்பின் அவற்றை அடையாளம் காண்பதற்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.