AIADMK-BJP: தீர்மானம் போட்டு தீர்த்து கட்டிய இ.பி.எஸ்.. பா.ஜ.க. கூட்டணிக்கு டாடா காட்டிய அதிமுக!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக அதிமுக விலகுவதாக அறிவித்துள்ளது.

Continues below advertisement

AIADMK-BJP: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக அதிமுக விலகுவதாக அறிவித்துள்ளது.

Continues below advertisement

அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது:

அதிமுக தலைவர்கள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். இதனால், அதிமுக கூட்டணயில் பாஜக இல்லை என்று அதிமுக தலைவர்கள் கூறிக் கொண்டு வந்தனர். நேற்று கூட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை  அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்தே ஆக வேண்டும். அதிமுக தலைமையில் திமுகவுக்கு எதிராக மெகா கூட்டணியை தனித்தே உருவாக்குவோம் என பெரும்பான்மை மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் கூறினர்.

தீர்மானத்தில் என்ன இருக்கு?

இதனை அடுத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

"தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.


மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், கழகப் பொதுச் செயலாளர்,  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 - திங்கட் கிழமை), கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க 

AIADMK-BJP: உடைந்தது அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி...தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு!

Continues below advertisement
Sponsored Links by Taboola