அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 21 பேரை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ கழகத்தின் கொள்கைகளுக்கும், குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், சட்டத்திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்து கொண்டதாலும், கட்சிக்கும் களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், நாஞ்சில் கோலப்பன், சுப்புரத்தினம், ஜெயதேவி, வளசை மஞ்சுளா பழனிசாமி, N.ஜவகர், தயாளன் உள்ளிட்ட 22 பேர் நீக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நீக்கப்பட்டவர்களின் முழு விவரம் மேற்படி சேர்த்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகுந்த பரபரப்புக்கிடையே, கடந்த 11 ஆம் நடந்த அதிமுக பொதுக்குழு இராண்டாவதாக கூடிய நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பூட்டி இருந்த அதிமுக அலுவகத்தை உடைத்து உள்ளே நுழைந்தனர். இதனையடுத்து அங்கு கூடியிருந்த எடப்பாடி ஆதரவாளர்களுக்கும், அவர்களுக்குமிடையே மோதல் உண்டானது. இந்த மோதல் கலவரமாக வெடித்தது.
இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, காவல்துறை தனது அதிகாரத்தை பயன்படுத்தி, வருவாய் துறை மூலம் சட்டப்பிரிவு 145 பயன்படுத்தி அதிமுக அலுவலகத்தை சீல் வைத்து மூடியது. அன்று நடந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலளாராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈபிஎஸ் ஓபிஎஸை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அதனைத்தொடர்ந்து பேட்டியளித்த ஓபிஎஸ் ஈபிஎஸை தான் கட்சியில் இருந்து நீக்குவதாக பேட்டியளித்தார். அதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் மகன் உட்பட 18 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஓபிஎஸ்,எடப்பாடி பழனிசாமி உட்பட 22 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இந்த நிலையில் இன்று கட்சியில் இருந்து 44 பேரை நீக்குவதாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் ஈபிஎஸ் இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும், ஏபிபி ஆப்பிலும் பின் தொடரலாம்.