காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளையும், வேளாண் துறை பணிகளையும், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேரில் சென்று பார்வையிட்டு இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுப் பணியின் போது காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட காலூர் கிராமத்தின் வழியாக சென்ற போது காரை நிறுத்த சொல்லி இறங்கி, கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திடீரென நுழைந்து ஆய்வு மேற்கொண்டார்.
வகுப்பறையில் நுழைந்து ஆய்வு செய்த போது ஆர்வம் மிகுதியால் தாயை போல தரையில் அமர்ந்து பள்ளிக் குழந்தைகளுக்கு கணக்கு பாடத்தினை எளிமையாக புரியும் வகையில் சொல்லிக் கொடுத்ததுடன், கணிதப் பெட்டியில் உள்ள காம்பஸ் கருவியை கொண்டு வட்டம் போடுவதையும், அளவீடு செய்வதையும் கலெக்டர் ஆர்த்தி, குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பதை போல் கிராமப்புற பள்ளி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தார்.
மேலும் படிக்க:சென்னையில் பரபரப்பு.. பதைபதைத்த சுற்றம்.. 5-வது மாடியில் இருந்து விழுந்து இறந்த சிறுமி..
தாயை போல் தரையில் அமர்ந்து கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்த கலெக்டரின் கனிவான செய்கையைக் கண்டு, கல்வி கற்பிக்கும் பள்ளி ஆசிரியர்களும், கிராம மக்களும் ஆச்சரியத்துடன் பார்த்து வெகுவாக பாராட்டினார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்