இந்தியாவின் டாப் 10 கல்லூரிகள் எவை எவை என்ற தேசிய தரவரிசைப் பட்டியலில், தமிழகத்தில் உள்ள 3 கல்லூரிகளுக்கு இடம் கிடைத்துள்ளது. அவை எந்த எந்தக் கல்லூரிகள் என்று பார்க்கலாம்.


2015 முதல் ஆண்டுதோறும் தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி வருகிறது. இதில் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் 5 முக்கியக் காரணிகளை வைத்து மதிப்பிடப்படுகிறது. அதாவது கற்பித்தல், கற்றல் மற்றும் அதற்கான வளங்கள் (Teaching Learning & Resources), ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (Research and Professional Practice), பட்டப்படிப்பு (Graduation Outcome), வெளிப்படுதல் மற்றும் உள்ளடக்கம் (Outreach & Inclusivity), கருத்து (Perception) ஆகிய 5 காரணிகள் தரவரிசைப் பட்டியலைத் தீர்மானிக்கின்றன.


அந்த வகையில் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 4-வது முறையாக இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தம் என்ற பிரிவிலும் பொறியியல் பிரிவிலும் ஐஐடி சென்னை முதலிடத்தில் உள்ளது.


சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியல் 


மிரந்தா ஹவுஸ், டெல்லி - முதல் இடம்


இந்து கல்லூரி - 2ஆம் இடம்


மாநிலக் கல்லூரி, சென்னை - 3ஆம் இடம்


லயோலா கல்லூரி, சென்னை -  4ஆம் இடம்


லேடி ஸ்ரீராம் பெண்கள் கல்லூரி, டெல்லி - 5ஆம் இடம்


பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி, கோயம்புத்தூர்- 6ஆம் இடம் 


ஆத்மா ராம் சனாதன தர்மக் கல்லூரி, டெல்லி- 7ஆம் இடம்


புனித சேவியர் கல்லூரி, கொல்கத்தா-8ஆம் இடம்


ராமகிருஷ்ணா மிஷன் வித்யாமந்திரா, ஹவுரா- 9ஆம் இடம் 


கிரோரி மால் கல்லூரி, டெல்லி- 10ஆம் இடம் 


அதேபோல தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள், மேலாண்மைக் கல்லூரிகள், முதுகலைப் படிப்புகளுக்கான கல்வி நிறுவனங்கள் ஆகியவையும் வெளியாகி உள்ளது. தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 


ஒட்டுமொத்தக் கல்லூரிகளுக்கான பட்டியலில், தொடர்ந்து 4-வது முறையாக இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்தக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல்


ஐஐடி சென்னை - 1ஆம் இடம்
ஐஐஎஸ் பெங்களூரு  - 2
ஐஐடி பாம்பே - 3
ஐஐடி டெல்லி - 4
ஐஐடி கான்பூர் - 5
ஐஐடி காரக்பூர் - 6
ஐஐடி ரூர்க்கி - 7
ஐஐடி குவாஹாட்டி - 8
எய்ம்ஸ் டெல்லி - 9
ஜேஎன்யூ டெல்லி - 10ஆம் இடம்.


மேலும் படிக்க:Rs 1000 Scholarship: கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண