இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இதுவரை மதுரையிலிருந்து காசி கயா போன்ற இடங்களுக்கு ரயில் மூலம் சுற்றுலா நடத்தி வந்தது. தற்பொழுது ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்சியிலிருந்து கயா, வாரணாசி, அலகாபாத் மற்றும் அயோத்தியா போன்ற ஆன்மிக தலங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா நடத்த இருக்கிறது. இந்த 7 நாட்கள் சுற்றுலா ஜூலை 27 அன்று திருச்சியில் இருந்து துவங்குகிறது.


விமான கட்டணம் உள்ளூர் போக்குவரத்து தங்குமிடம் உணவு பயண காப்பீடு உட்பட ஒரு நபருக்கு ரூபாய் 37,900 கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. கொரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளோடு இந்த சுற்றுலா நடைபெறும். அரசு ஊழியர்கள் எல்.டி.சி. வசதியைப் பயன்படுத்தி இந்த சுற்றுலாவில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு  8287931977 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

 










ரயில்வே தொலைத்தொடர்பு ஊழியர்களுக்கு விருது

 


ரயில்வே துறையில் ரயில் இயக்கத்திற்கு உறுதுணையாக இருப்பது சமிக்ஞை (சிக்னல்) மற்றும் தொலைத்தொடர்பு பிரிவு ஆகும். இரு ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்களை பாதுகாப்பாக இயக்க அந்த இரு ரயில் நிலையங்களிலும் "பிளாக் இன்ஸ்ட்ரூமென்ட்"  என்ற இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்த  இயந்திரங்கள் மூலம் அந்தந்த நிலைய அதிகாரிகள் ரயில்களைப் பாதுகாப்பாக இயக்குகிறார்கள். இது மாதிரி இயந்திரங்கள் எல்லா ரயில் நிலையங்களிலும் உண்டு. மேலும் ரயில் இயக்கத்தை கட்டுப்படுத்த கலர் விளக்கு கை காட்டிகள் வழிநெடுகிலும் நிறுவப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் டிஜிட்டல் கடிகாரங்கள், டிஜிட்டல் ரயில் தகவல் பலகைகள், தானியங்கி தகவல் ஒளிபரப்பு கருவிகள் போன்றவையும் நிறுவப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் பராமரிப்பவர்கள் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர்கள் ஆவார்கள்.



 

அவர்களில் வெகு சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு மதுரையில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. முதன்மை தலைமை சிக்னல் தொலைத்தொடர்பு பொறியாளர் அளவிலான 67 வந்து ரயில்வே வார விழா விருது வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை (25.6.2022) மாலை மதுரை வைகை அதிகாரிகள் கிளப்பில் நடைபெற்றது. சிறப்பாக பணிபுரிந்த உதவி சிக்னல் தொலைதொடர்பு பொறியாளர் அசோக் உட்பட 46 ஊழியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருதுகளை தலைமை முதன்மை சிக்னல் தொலைதொடர்பு பொறியாளர் கே. மதுசுதன் வழங்கி ஊழியர்களை பாராட்டினார்.



விழாவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு ஆகியோர் வாழ்த்தி பேசினர். முதுநிலை கோட்ட சிக்னல் தொலைதொடர்பு பொறியாளர் ராம்ப்ரசாத் வரவேற்புரையாற்றினார். இறுதியில் கோட்ட சிக்னல் தொலைதொடர்பு பொறியாளர் குகுலோத் யுகேந்தர் நன்றி கூறினார்.