இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்ற நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து 2 மணி நேரம் பேசினார்.

மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் பேசியது என்ன என்பது குறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் கொடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்ற நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து 2 மணி நேரம் பேசினார்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முழுக்க முழுக்க மக்கள் பிரச்சினைகளுக்காக மட்டுமே அமித்ஷாவை சந்தித்தேன்.
அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நிலவுவதாக ஊடகங்களில் தான் செய்தி வெளியாகிறது. நடாளுமன்றம் மறுசீரமைப்பு குறித்தும் அமித்ஷாவிடம் எடுத்துரைத்தோம்.
டாஸ்மாக் ஊழல் குறித்து முழுமையான விசாரணை நடத்த வலியுறுத்தினோம்.
கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்க காலம் உள்ளது. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலையை பொறுத்தது.
இரு மொழிக்கொள்கை தொடர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். முல்லை பெரியார் அணையை பலப்படுத்த கேரளா தடையாக இருக்கக்கூடாது என வலியுறுத்தினோம்.
தமிழ்நாட்டில் போதை புழக்கம் அதிகமாக இருப்பதாகவும் அமித்ஷாவிடம் எடுத்துரைத்தோம்.
100 நாள் வேலை திட்டம், கல்வி நிதி ஆகியவற்றை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த அமித்ஷாவிடம் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாட்டுக்கு தேவையான உதவிகளை செய்வதாக அமித்ஷா உறுதியளித்துள்ளார். ” எனத் தெரிவித்தார்.