கரூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம். 

Continues below advertisement

 

Continues below advertisement

 

கரூரில், அ.தி.மு.க., சார்பில், மொழிப்போர் தியாகிகள் இன பொதுக்கூட்டம் நடந்த அனுமதி வழங்கப்பட்டு, மேடை அமைக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் போலீசார் திடீரென அனுமதியை மறுத்ததற்கு முன்னாள் விஜய் பாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். கரூர் எஸ்.பி., அலுவலகத்தில், முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., மாவட்ட செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி, மனு அளித்தார்.

 

அதன் பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மொழிப்போர் தியாகிகள் நாள் பொதுக்கூட்டத்திற்கு முதலில் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அனுமதி கேட்கப்பட்டது. தி.மு.க., சார்பில் இருப்பதால் லைட் ஹவுஸ் கார்னர் கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் அ.தி.மு.க.,வுக்கு அனுமதி அருகே பொது கூட்டம் நடக்க மறுக்கப்பட்டது.

 

பின், கரூர் செங்குந்தபுரம், 80 அடி சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. அங்கு, அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், மேடை அமைக்கும் பயணிகள் முடிந்து விட்டன. பேச்சாளர்கள் வருகை தந்த நிலையில், மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. தற்போது திடீரென பொதுக்கூட்டம் எடுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போலீசார் பாரபட்சமாக நடந்து கொள்கின்றனர். எனவே, நாளை  (இன்று)கூட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி, எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். இதற்கெல்லாம் முடிவு வெகு விரைவில் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, அ.தி.மு.க., வக்கீல் அணி செயலாளர் சுப்பிரமணியன், தாந்தோன்றி மலை மேற்கு செயலாளர் கிருஷ்ணன் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனி இருந்தனர்.

கரூரில் மத்திய அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஒன்றிய பி.ஜே.பி அரசின் விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகளின் டிராக்டர் பேரணியை  தமிழகம் முழுவதும் நடத்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி திட்டமிடப்பட்டது. கரூரில் திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் டிராக்டர் பேரணி நடத்துவதாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் விவசாய அமைப்புகளை சார்ந்தவர்கள் திரண்டனர். அங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்து இருந்த நிலையில், டிராக்டர் பேரணியை நடத்தவில்லை என்றும், ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள போலீசாரிடம் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அமைப்பின் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் தலைமையில் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டம் காரணமாக அதிகளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மொழிப்போர் தியாகிக்கு எம்எல்ஏ மலர் தூவி மரியாதை.

குளித்தலையை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்சாயத்து, கவுண்டன்பட்டியில் மொழிப்போர் தியாகி முத்து இல்லத்தில் அவருடைய உருவப்படத்துக்கும் எம்எல்ஏ மாணிக்கம், மலர் தூவி மரியாதை செலுத்தினார், தொடர்ந்து, மாவட்ட பஞ்சாயத்து, துணைத்தலைவர் தேன்மொழி, நங்கவரம் டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர், அன்பழகன், நகர திமுக செயலாளர் சுப்ரமணி, கவுன்சிலர் செந்தில்வேலன் ,திமுக வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் ராஜேந்திரன் பஞ்சாயத்து, தண்ணீர் பள்ளியில் அவருடைய உருவப்படத்துக்கு எம்எல்ஏ மாணிக்கம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.