மத்திய அரசு அறிவித்துள்ள பத்மஸ்ரீ விருது பெரும் பாமுடி வீரர்களை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் குடியரசு தின விழாவில் சால்வை அணிவித்து பாராட்டு.


 




 



74 ஆவது குடியரசு தின விழா கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை மத்திய அரசு பத்மஸ்ரீ விருது பெரும் நபர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் சென்னை செங்கல்பட்டு மாவட்டம், சென்னேரி கிராமத்தில் உள்ள இருளர் சமூக சேர்ந்த மாசி மற்றும் வடிவேல் இருவருக்கும் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்த பாம்பு பிடி வீரர்கள் நேற்று முதல் 17 நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் டி என் பி எல் பகுதியில் பாம்பு பிடிக்க வந்துள்ளனர். மேலும் விருது பெயர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை தொடர்பு கொண்ட வனத்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் இன்று நடைபெற்ற 74 வது குடியரசு தின விழாவில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் அவர்களை வரவேற்று சால்வை அறிவித்து பாராட்டை தெரிவித்துள்ளார்.




 


 


இது சம்பந்தமாக பத்மஸ்ரீ விருது பெற்ற செங்கல்பட்டு மாவட்ட பாம்பு பிடி வீரர் மாசி கூறியதாவது.


செங்கல்பட்டு மாவட்டம், சென்னேரி கிராமத்தை சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் இருவருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படுவது பத்மஸ்ரீ விருதுகள். நாட்டிற்காக மிகப்பெரிய சேவைகளை ஆற்றியவர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டைச் சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையனுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்பு பிடிப்பதில் வல்லவர்களான இவர்கள் மக்கள் வாழும் குடியிருப்பில் புகும் கொடிய விஷப்பாம்புகளை பிடிக்கும் சேவையாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வென்றுள்ள வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் இருவருக்கும் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் தமிழ்நாடு மட்டுமின்றி அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும்  சென்று கொடிய விஷமுள்ள பாம்புகளை பிடித்துள்ளனர். விவரம் தெரிந்த வயதில் இருந்து பாம்பு பிடிக்க சென்றோம். அப்பா அம்மா உடன் சென்று நாங்கள் பாம்பு பிடித்து இருக்கிறோம். தலைமுறை தலைமுறையாக விஷத்தன்மை உள்ள பாம்பான கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை, நல்ல பாம்பு போன்ற விஷ பாம்புகளை மட்டுமே பிடித்து வருகிறோம் என்றும், எங்கள் குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


 




 


செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்கள் பணி நிமித்தமாக கரூர் மாவட்டத்தில் இருந்ததால் அவருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சால்வை அணிவித்து மரியாதை செய்தது குறிப்பிடத்தக்கது.