வேலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருவதாக தெற்கு காவல் நிலையத்லிற்கு புகார் அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த புகாரின் தொடர்பாக காவல்துறையினரால் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் தொடர் வாகன சோதனைகளிலும் கடந்த ஒருவாரம் காலமாக வேலூர் தெற்கு காவல் நிலைய காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சிசிடிவி காட்சியில் இருசக்கர வாகனம் திருடும் நபர்களை அடையாளம் தெரிந்துகொண்டு வாகன சோதனையில் சிக்குவார்கள் என்ற அடிப்படையில் சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது இரவு சிசிடிவியில் பதிவான நபர் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டு இருந்தார். அவரை காவல்துறையினர் மடக்கி விசாரணை நடத்தினார்.


 


 




 அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தால் சந்தேகத்திற்கு இடமாக பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் காவல்துறையினர் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் அவர் இராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஆணைமல்லூரை சேர்ந்த தனசேகர் வயது (42) என்பவர் என்றும் அவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.


தனசேகரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் "குவாட்டர்க்காகவும் 1000, முதல் 3000 வரை அன்றாட செலவிற்காக, வேலூர், இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், சென்னை ஆகிய இடங்களில் இருசக்கர வாகனங்களை லாவகமாக திருடி விற்பனை செய்தும் சில நபர்களிடம் குவாட்டர்க்காக இருசக்கர வாகனத்தை அடமானம் வைத்ததும் தெரியவந்தது. தனசேரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், பார்க்கிங்கில் பதுக்கி வைத்திருந்ததும், அடமானம் வைத்திருந்ததும், விற்பனை செய்ததுமாக 27 இருசக்கர வாகனங்களை அடையாளம் கண்டு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


 





 


மேலும், 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை தனசேகர் ஒரு குவாட்டருக்காக திருடி அடமானம் வைத்திறுப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், 27 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த வேலூர் தெற்கு காவல் நிலைய காவல்துறையினர் இருசக்கர வாகன உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். 27 இருசக்கர வாகனங்கள் திருடிய தனசேகர் மீது IPC 379 உட்பட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்