தமிழ்நாடு சட்டமன்றத்தில் 3வது முறையாக வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையாக இருக்கலாம். தங்க சம்பா சாப்பிட்டால் தங்கமாக இருக்கலாம். இதெல்லாம் சாப்பிடனும்” என்றார்.


அப்போது, பேசிய சபாநாயகர் அப்பாவு “ எல்லாருக்கும் கொடுங்க. சாப்பிடுவதற்கு தயாராக இருக்காங்க” என்றார். சபாநாயகரின் இந்த பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது. அதற்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ‘எல்லாருக்கும் கொடுத்துடுவோம்’ என்றார். இதைக்கேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிரித்தார்.