தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மிகவும் அதிகமாக வாட்டி வருகிறது.  குறிப்பாக கடந்த 10 நாட்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. இதன்காரணமாக பல்வேறு இடங்களில் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். 


இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் கத்திரி வெயில் தொடங்குகிறது. இன்று தொடங்கும் கத்திரி வெயில் வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும். இந்தக் காலத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. கத்திரி வெயில் இன்று தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் நீர் வறத்து மிகவும் குறைந்துள்ளது. 


தமிழ்நாடு அரசின் பராமரிப்பில் சுமார் 90 ஆணைகள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு சுமார் 224 டிஎம்சி. வடகிழக்கு பருவமழைக்கு பின்பு ஜனவரியில் ஒட்டுமொத்தமாக சுமார் 200 டிஎம்சி நீர் இருப்பு இருந்தது. இந்த நீர் அணைகளில் குடிநீர், பாசனம் மற்றும் இதர தேவைகளுக்காக நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக தற்போது சுமார் 134 டிஎம்சியாக நீர் இருப்பு குறைந்துள்ளது. 


இவற்றில் சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையில் 72.1 டிஎம்சி நீர் உள்ளதாக கூறப்படுகிறது. இவை தவிர கோவை, சோலையாறு, திருநெல்வேலி, பாபநாசம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பெரிய அணைகள் மற்றும் சிறிய அணைகள் வறண்டு விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. கத்திரி வெயில் காலத்தில் விரைவாக இந்த நீர் இருப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நேற்று மாலை நிலவரப்படி வேலூரில் 108 டிகிரி பார்ன்ஹீட் வெப்பம் பதிவானது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண