பிடிஆர் கெத்து; ஆனால் அமைச்சர் மூர்த்தி? - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நடந்த சம்பவம் - கலாய்த்து தள்ளிய செல்லூர் ராஜு
மதுரையில் விழா ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ “அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சம்பவத்தை வைத்து அமைச்சர் மூர்த்தியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக கலாய்த்து தள்ளினார்.
மதுரையில் விழா ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ “அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அதில் முதல் வரிசையில் அமைச்சர்கள் உதயநிதி, மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். அதே வரிசையில் உதயநிதியின் மகன் இன்பநிதியும் அமர்ந்திருக்கிறார். அவருடைய நண்பர்களும் அமர்ந்திருக்கின்றனர். கருணாநிதி கூட அவரது மகன் ஸ்டாலினை பார்த்து பார்த்து கொண்டுவந்தார். இன்னைக்கு ஸ்டாலின் நேரடியாக களத்தில் கொண்டுவந்துட்டார். இன்பநிதியை கொண்டு வந்து விட்டார்கள். அவர் UKல படிக்கிறதா சொன்னாங்க. இங்கே வந்துட்டார்.
ஒரு அரசுவிழாவில் ப்ரொடோகால் இருக்கு. அதை பின்பற்ற வேண்டும். மக்கள் ஆட்சியை உங்கள் கையில் கொடுத்திருக்கிறார்கள். அனுபவியுங்கள். எங்களுக்கு கொடுத்து வைக்க வில்லை. நான் என்ன செய்வேன் அதற்காக ஓட மாட்டோம். இங்கேயே இருந்து மக்கள் பணி ஆற்றுவோம். நாங்கள் மக்கள் தொண்டனாகத்தான் இருப்போம்.
நாங்கள் ஆண்ட பரம்பரை என்று கூறினாரே அமைச்சர் மூர்த்தி. அவர் என்ன செய்தார் தெரியுமா? அறைக்குள் ஒரு அமைச்சர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு பொது கூட்டத்தில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்க வேண்டும். இன்பநிதியின் தொடையில் பிஸ்கட் துகள்கள் விழுந்து விட்டதாம். உடனே அமைச்சர் மூர்த்தி ஓடி போய் துடைத்து விடுகிறார். இப்பவே துண்டு போடுகிறார் இன்பநிதியிடம். என்னை அடுத்து எப்படியாவது அமைச்சராக்கி விடுங்கள் என்று.
பக்கத்தில்தான் பிடிஆர் இருந்தார். அவர் சும்மா கெத்தா உட்காந்திருந்தார். என்னதான் இருந்தாலும் மேன் மக்கள் மேன் மக்களே. அதுதான் கெத்து. ஒரு ஆள் இப்படி இருந்தால் ஒரு ஆள் அப்படி இருக்காங்க” என கலாய்த்தார்.