நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் நடவடிக்கை வேண்டாம் என தெரிவித்து விட்டு சென்ற நிலையில் கடந்த மாதம் மீண்டும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார் இந்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் பெறப்பட்டு நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அளித்த நிலையில் வரும் 18ஆம் தேதி சீமான் விசாரணைக்கு ஆஜராவதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் வீரலட்சுமி சீமானுக்கு எதிராக வீடியோ ஒன்றை பதிவிட்ட நிலையில் வீரலட்சுமிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை விஜயலட்சுமி நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் இந்த நிலையில் நள்ளிரவு 16.9.2023 வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தனது வக்கீல்களுடன் வந்த நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக கூறி வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் எழுத்துப்பூர்வமான வாபஸ் பெரும் கடிதத்தை அளித்தார்.
இந்தநிலையில், நடிகை விஜயலட்சுமி திடீரென சீமான் மீது தான் அளித்த வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ நாம் தமிழர் கட்சி ஒருக்கிணைப்பாளர் சீமானை யாரும் எதுவும் செய்யமுடியாது. அவர் பலம் வாய்ந்தவராக இருப்பதால், காவல்துறை சீமான் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. தனி ஒருவராக என்னால் போராட முடியவில்லை. அவரை எதிர்கொள்ள எவரும் முன்வரவில்லை, எனக்கு போதிய ஆதரவும் யாரிடமிருந்து கிடைக்கவில்லை.
நான் அளித்த புகார் எந்த அளவில் இருக்கிறது, நடவடிக்கையில் முன்னேற்றம் இருக்கிறதா என்பதும் எனக்கு தெரியவில்லை. இதன் காரணமாக சீமான் மீது நான் அளித்த புகாரை வாபஸ் பெறுகிறேன். வழக்கை வாபஸ் பெற யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. புகார் மனு விவகாரத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு வாபஸும் பெறுகிறேன். சொல்லமுடியாத அளவுக்கு அதிக அளவிலான கொடுமைகள் நடந்தது. அதனால் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு பெங்களூர் செல்கிறேன். முன்பு எனக்கு ஆதரவாக இருந்த வீரலட்சுமி கடந்த சிலதினங்களாக ஒரு வழியில் செல்கிறார், என்னையும் ஒரு வழியில் எடுத்து செல்கிறார். இதனால் சீமானிடம் பேசினேன் வழக்கை வாபஸ் பெற்றேன். இந்த வழக்கு தொடர்பாக இனி சென்னை வரப்போவது இல்லை. இந்த வழக்கில் எதிர்பார்த்த அளவு திருப்தியும் இல்லை.” என்றார்.
முன்னதாக, வீரலட்சுமி வீட்டில் இருந்து வெளியேறிய விஜயலட்சுமி, தனது சகோதரியுடன் வேறொரு இடத்தில் தற்போது இருந்து வருகிறார். நியாயம் கேட்டு வந்த என்னை ஒரு சிலர் அவர்களது சுய லாபத்திற்காக பயன்படுத்தி கொண்டார்கள். இதனால், மிகப்பெரிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளானேன்” என்றார். வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விஜயலட்சுமி தன்னுடைய புகாரை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.